Dansk Tamilsk Forum » தழிழ்மக்களுக்கான அரசியல் தீர்வே முழு இலங்கைத் தீவிக்குமான தீர்வு

தழிழ்மக்களுக்கான அரசியல் தீர்வே முழு இலங்கைத் தீவிக்குமான தீர்வு


தமிழ் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் பாதிப்புக்களை சிங்களதேசம் மட்டும் அல்லாமல் முழு இலங்கைத்தீவின் மக்களும் சந்தித்து வருகின்றனர். தமிழ் இனத்தை அழிக்க மேற்கொண்ட போர் நடவடிக்கைகாக வாங்கிய கடனை கட்டமுடியால் சிங்கள இனவாத அரசு பெரும் பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கின்றது. சிங்கள இனவாத அரசியல் தலைவர்களின் சுயலாப அரசியலினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் எரிபொருள் தட்டுப்பாடு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று வீதியில் இறங்கி தாம் தெரிவுசெய்த போர் வெற்றியாளர்களாக கொண்டாடிய அரசியல் தலைவர்களுக்கு ஏதிராகவே போராடுகின்றனர்.

சிறிலங்காவின் பொருளாதார பிரச்சனைக்கு நிபந்தனை இல்லாமல் இந்தியா இப்பொழுது உதவி செய்து வருவதை காணக்கூடியதாகவுள்ளது. அனைத்துலக நாடுகளும் உதவி செய்ய முன்வரலாம்.

தமிழ் மக்களாகிய நாம் இந்த சந்தர்பத்தில் அனைத்துலக நாடுகளிடம் சிறிலங்காவிற்கான உதவிகளை தமிழ் மக்களின் இறையாண்மை சுயநிர்ண்மையவுரிமை பாதிக்காவண்ணமுள்ள ஒரு அரசியல் தீர்வை சிறிலங்கா வழங்கவேண்டும் என்ற நிபந்தனையுடனேயே வழங்கவேண்டும் என் கோரிக்கை விடவேண்டும்.

எமது ஒரு சில அரசியல் தலைவர்களே இது போன்ற கோரிக்கைகளை கோரியுள்ளனர் இந்த சந்தர்ப்பத்தில் முழு தமிழ் அரசியல் தலைவர்களும் ஒற்றுமையாக எமது இனத்திற்கான அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள செயலாற்ற வேண்டும் என டென்மார்க் தமிழர் பேரவை டென்மார்க் வாழ் தமிழ் மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றது.

சிங்கள அரசியல் தலைவர்களை மாற்றுவது இலங்கை தீவின் தற்போதய நிலமைக்கு நிரந்தர தீரவாகாது. ஆரசியல் அமைப்பின் மாற்றத்தின் ஊடாக இறையாண்மை அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்கு வழங்கப்படுவதன் ஊடாகவே சிங்கள மக்களின் பொருளாதாரம் வளர்சியடைய முடியும்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எட்டப்படுவதன் ஊடாக தமிழர்களும் சிங்களவர்களும் தத்தமது பிரதேசங்களை ஒற்றுமையாக கட்டியெழுப்பமுடியும்.

இந்த கருத்துக்கள் சிங்கள தலைமைகளுக்கு எதிராக போராடும் சிங்கள இளைஞர்களிடமும் எடுத்துச்செல்லபடவேண்டும்.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் தாம் வாழும் நாடுகளின் அரசியல் தலைவர்களிடம் கோரிக்கை விடவேண்டும். டென்மார்க் தமிழர் பேரவையினர் இலங்கை தீவின் தற்போதய நிலமை தொடர்பாக டென்மார்க் வெளிவிவகார அமைச்சர் மற்றும் அனைத்து கட்சிகளின் வெளிவிவகார பொறுப்பாளர்களிடம் கோரிக்கைவிடவுள்ளர்.

கமல்
அரசியல் பிரிவு
டென்மார்க் தமிழர் பேரவை

Comments are closed.

Browse topics

“அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரம் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரியும் பணி. மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றுப்படும் தொண்டு.”
தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்

Contact

Kælkebakken 12
8870 Langå
CVR.nr.: 39146487
Tlf.: +45 91 43 02 87
Web: www.dansktamilskforum.dk
Mail: forum@dansktamilskforum.dk