Dansk Tamilsk Forum » டென்மார்க் தமிழர் பேரவையின் கண்டன அறிக்கை 10-04-2018

டென்மார்க் தமிழர் பேரவையின் கண்டன அறிக்கை 10-04-2018

தமிழ் மக்களின் ஒற்றுமையை குலைக்கும், வன்முறையை தூண்டும் நடவடிக்கைகளை டென்மார்க் தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.!

அண்மையில் உலக தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் 6வது உலககிண்ண சுற்றுப்போட்டி டென்மார்க்கில் Nyborg நகரில் நடைபெற்றிருந்தது. இந்த சுற்றுப்போட்டியில் சிறிலங்கா என அழைக்கப்படும் தீவில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். கலந்து கொண்டவர்கள் தமிழ் பேசும் மக்களாக இருந்த போதும் சிறிலங்கா பேரினவாத அரசின் அடக்குமுறையின் கீழேயே வாழ்ந்து வருவதினால் சிறிலங்கா பேரினவாத அரசின் தேசிய கொடியை கொண்டே தமது பிரதிநிதிவத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த சுற்றுப்போட்டி நடைபெறுவதற்கு இரு வாராங்களுக்கு முன்னர் போட்டி நடத்துபவர்களை தொடர்புகொண்ட தமிழ் அமைப்பொன்றை சேர்ந்தவர்கள் இந்த சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ளும் எவரும் சிறிலங்கா தேசிய கொடியை வெளிப்படுத்தக்கூடாது என வற்ப்புறுத்தியுள்ளனர்.

சுற்றுப்போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் தமிழ் பேசும் மக்களாகவே மட்டும் இருந்த போதும் அவர்கள் வாழும் நாடுகளின் தேசிய கொடியையே வெளிப்படுத்தியிருந்தனர். உதாரணமாக கணடாவில் இருந்து வந்தவர்கள் கனேடிய தேசிய கொடியையே வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த சுற்றுப்போட்டியில் தமிழர்கள் எவரும் தமிழீழ தேசத்தை பிரதிநிதித்துவபடாமை கவலையளிக்கின்றது. தமிழீழ தேசத்தையும் போட்டியாளர்கள் யாராவது பிரதிநிதித்துவபடுத்தியிருந்தால் தமிழீழ தேசியகொடியும் சிறிலங்கா அரசின் தேசிய கொடிக்கு நிகராக பட்டொளி வீசி பறந்திருக்கும். இலங்கைத்தீவில் தமிழீழம் சிறிலங்கா என இரு தேசங்கள் உள்ளமையை மீண்டும் ஒருமுறை அனைத்துலகத்திற்கு இடித்துக்கூறியிருக்கமுடியும்.

டென்மார்க்கில் டெனிஸ் அமைப்பொன்றால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இவ்வாறு தமிழீழ தேசிய கொடியுடன் தமிழ் உதைபந்தாட்ட குழு ஒன்று கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதைவிடுத்து சிறிலங்காவில் இருந்து வந்து கலந்து கொண்டவரை சிறிலங்கா தேசியகொடியை வெளிப்படுத்த வேண்டாம் என வற்புறுத்துவதும் அவர்கள் மீது வன்முறை பிரயோகிக்க முயற்சித்தமையும் வரவேற்க்கத்தக்கதல்ல. மாறாக தமிழ் மக்கள் மீது டெனிஸ்மக்கள் கொண்டுள்ள நன்மதிப்பை கெடுப்பதாகவே அமையும். அத்துடன் அரசியல் முதிர்சியான நடவடிக்கையுமல்ல.

தமிழீழ தேசிய விடுதலை போராட்டத்ததை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப்புலிகள் எந்தவொரு சந்தர்பத்திலும் சிறிலங்கா என்ற தேசத்தை ஏற்றுக்கொள்ளாமலோ சிங்கள மக்கள் மீது வெறுப்பரசியல் நடாத்தியவர்களாகவோ இருக்கவில்லை. இதுவே உலக நாடுகளில் தமிழ் தேசிய தலைமை மீது நன்மதிப்பை ஏற்ப்படுத்தியிருந்தது.

தமிழ் தேசிய தலைமையின் எச்சமாக தம்மை கூறிக்கொண்டு இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது தமிழ் தேசிய தலைமையையும் இஸ்ரேல் நாட்டை அங்கீகரிக்க மறுக்கும் இஸ்லாமிய பயங்கரவாத குழுக்கள் போன்றே அனைத்துலகத்தால் உற்றுநோக்கப்படும்.

அத்துடன் பூப்பந்தாட்ட போட்டியில் கலவரங்களை ஏற்படுத்த முயன்றவர்கள் தமிழ் தேசிய செயல்பாட்டாளர்கள் மீதும் முன்னாள் போராளிகள் மீதும் அவதூறு பிரச்சாராத்தை அனாமதேய இணையத்தளங்கள் ஊடாக மேற்கொண்டுள்ளதுடன் வன்முறைகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.

அண்மையில் இந்த அமைப்பை விமர்சித்த மனிதநேய செயல்பாட்டாளர் கயன் மீது ஜெனிவாவில் தாக்குதல் முயற்சி இவர்களால் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான தமிழ் மக்களின் ஒற்றுமையை குலைக்கும், வன்முறையை தூண்டும் நடவடிக்கைகளை டென்மார்க் தமிழர் பேரவை வன்மையாக கண்டிப்பதுடன் தமிழ் மக்களிடையே அரசியல் செய்வதாக தம்மை அடையாளப்படுத்தி கொள்பவர்கள் சக அமைப்புகள் மீது அவதூறுகளை பரப்புவதை தவிற்த்து வன்முறையற்ற முதிர்சியான ஆக்கபூர்வமான தமிழ் தேசிய அரசியலை மேற்கொள்ள வேண்டும் என வேண்டிக்கொள்கின்றோம்.

2009 ஆம் ஆண்டு சிறிலங்கா பேரினவாத அரசால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாரிய இனப்படுகொலையுடன் விடுதலைப் போராட்டத்தின் ஆயுதங்கள் மட்டுமல்லாமல் தேசிய தலைமையும் மௌனிக்கப்பட்டமையை தொடர்ந்து தமிழ் மக்களிடையே பல்வேறு அமைப்புக்கள் தமிழ் தேசிய அரசியலை தொடர்ந்தெடுத்து வருகின்றன. பெரும்பாலான அமைப்புக்கள் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இருந்தே செயல்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் 2010 ஆம் ஆண்டு டென்மார்க் தமிழர்களினால் சனநாயக வழிமுறையில் அமைக்கப்பட்டதே டென்மார்க் தமிழர் பேரவை.

தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்

ஊடக பிரிவு
டென்மார்க் தமிழர் பேரவை

”அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரம் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரியும் பணி. மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றுப்படும் தொண்டு.”
தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்

Comments are closed.

Browse topics

“அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரம் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரியும் பணி. மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றுப்படும் தொண்டு.”
தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்

Contact

Kælkebakken 12
8870 Langå
CVR.nr.: 39146487
Tlf.: +45 91 43 02 87
Web: www.dansktamilskforum.dk
Mail: forum@dansktamilskforum.dk