Dansk Tamilsk Forum-டென்மார்க் தமிழர் பேரவை
2009 ஆம் ஆண்டு சிறிலங்கா பேரினவாத அரசால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாரிய இனப்படுகொலையுடன் விடுதலைப் போராட்டத்தின் ஆயுதங்கள் மட்டுமல்லாமல் தேசிய தலைமையும் மௌனிக்கப்பட்டமையை தொடர்ந்து தமிழ் மக்களிடையே பல்வேறு அமைப்புக்கள் தமிழ் தேசிய அரசியலை தொடர்ந்தெடுத்து வருகின்றன. பெரும்பாலான அமைப்புக்கள் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இருந்தே செயல்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் 2010 ஆம் ஆண்டு டென்மார்க் தமிழர்களினால் சனநாயக வழிமுறையில் அமைக்கப்பட்டதே டென்மார்க் தமிழர் பேரவை.
"அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரம் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரியும் பணி. மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றுப்படும் தொண்டு.”
தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்